கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசின் "உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ்ராஜன் கலந்துக்கொண்டு கல்லூரி மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.டி.சி.மகேஷ், கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் பாலமுருகன்,செயலாளர்.ராஜன்,
வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வழக்கறிஞர் தாமரைபாரதி, பேராசிரியர்கள்.இளங்குமார்,தர்மரஜினி,வைகுண்டபெருமாள், முத்துசாமி, சுதன்மணி,வழக்கறிஞர் சிவகோடீஸ்வரன், ஆர்.டி.ராஜா, சுப்பிரமணியன், அருண் மற்றும் பலர் இருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக