ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 16-வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழி மற்றும் மூத்த வாக்காளர்கள் கௌரவம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜனவரி, 2026

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 16-வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழி மற்றும் மூத்த வாக்காளர்கள் கௌரவம்!

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்
16-வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழி மற்றும் மூத்த வாக் காளர்கள் கௌரவம்!
பேரணாம்பட்டு , ஜன 23  -

வேலூர் மாவட்டம் இந்திய  தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலை வர்  வே.இரா. சுப்புலட்சுமி,  இ.ஆ.ப., அவர்களின் முன்மாதிரி (Role Model) வழிகாட்டுதலின் பேரில் தேசிய வாக் காளர் தினம் சிறப்பாகக் கொண்டாட ப்பட்டது. அதன் ஒரு பகுதியாக,  இன்று காலை 11.00 மணியளவில், பேர்ணாம் பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வாக்கா ளர் தின உறுதிமொழி, விழிப்புணர்வு ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மேலும், மூத்த வாக்காளர் கள் வட்டாட்சியர் அவர்களால் சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கௌர விக்கப்பட்டனர். பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் சந்தனம், குங்குமம் இட்டு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ் வில் 20-க்கும் மேற்பட்ட இருபாலின மூத்த வாக்காளர்கள் பங்கேற்று, பதினா றாவது தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கு தேனீர் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர்  ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள்  உதயகுமார், தனசேகரன், அலுவலக உதவியாளர்  ரமேஷ், வாக்கு ச்சாவடி முகவர்கள்  சுதர்சன்,  பவுர்ணமி, சங்கரி, பள்ளி ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர்  பொன். வள்ளுவன் அவர்கள் தலைமையேற்று, அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொண்டார். அவர் உரையாற்றுகை யில், பரிசுப் பொருட்கள், பணம் போன்ற சலுகைகளை ஏற்காமல், சாதி,  மதம், இனம், மொழி ஆகியவற்றைத் தாண்டி, நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் வாக்களிப்பதே உண்மையான ஜனநாய கக் கடமை” என வலியுறுத்தினார்.இந்த நிகழ்வு, மாணவர்களுக்கும் பொது மக்க ளுக்கும் வாக்குப்பதிவின் அவசியத்தை யும், ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்பு களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad