திருவண்ணாமலையில் விமான நிலை யம் அமைக்க சட்ட பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை !
திருவண்ணாமலை , ஜன 23 -
திருவண்ணாமலை மாவட்டம் மாநக ராட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற அண் ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே திருவண்ணாமலை மாநகராட்சி யில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை வைத்தார். பின்னர் கீழ் பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தேவையான நிதி ஆதாரத்தை கு.பிச்சாண்டி ஏற்பாடு செய் தால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்கப் படும் என்றார். மேலும், திருவண்ணா மலையில் விமான நிலையம் அமைப்பது தற்போது 'புரியாத புதிர்' போல இருப் பதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித் தார்
திருவண்ணாமலை செய்தியாளர்
T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக