ஓய்வு பெற்ற வெங்கடேஸ்வரா பள்ளி ஆசிரியருக்கு ஜனவரி-31க்குள் ஓய்வூ தியம் பெற்று வழங்க ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தில் முடிவு !
வேலூர் , ஜன 23 -
வேலூர் மாவட்டம் தமிழ் நாடு அரசின் சென்னை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் செயல் முறை கடி தத்தின் அடிப்படையில் வேலூர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டம் இன்று 23.01.2026 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தின் காயிதே மில்லத் (ஜிடி.பி.) கூட்ட அரங்கில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெற்றது. இக் கூட்டத்தில் வேலூர் வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியிலிருந்து கடந்த மே மாதம் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.நெப் போலியன் அவர்களுக்கு ஜனவரி 31க்குள் தடையின்மை சான்று வழங்கி ஓய்வூதியம் பெற்று வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆணையிட் டார். குறை தீர்வு கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்பு லெட்சுமி அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். மண் டல கருவூல கணக்கு துறை இணை இயக்குநர் உஷா, வேலூர் மாவட்ட கூடு தல் கருவூல அலுவலர் ஜி.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (கணக்கு) ஶ்ரீதர், கண்காணிப்பாளர் எல்.அஷோக், ரம்யா மற்றும் லாவண்யா ஆகியோர் ஓய்வூதியர்களின் கோரிக்கை கள் மற்றும் பெறப்பட்ட குறைகள் குறித்து எழுத்து பூர்வமான பதில்களை வாசித் தனர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனைவர் .செ.நா. ஜனார்த்தனன், இணை செயலாளர் கே.சேகர், செயற்குழு உறுப்பினர் எம்.நெப்போலியன் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் பி.குமரேசன், மாவட்ட பொருளாளர் பி.ஞானசேகரன், பேர்ணா ம்பட்டு வட்ட கிளை தலைவர் பெ.சுப்பி ரமணி, உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஓய்வூ தியர்கள் பங்கேற்று தங்களின் குறை களை பதிவு செய்தனர்.மேலும் அதர்கான தீர்வுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் கூறினார். குறிப்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையில் வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.நெப்போலியன் அவர்கள் ஓய்வு பெற்று 7 மாதங்கள் கடந்த நிலையிலும் ஓய்வூதிய பலன் பெற்று வழங்கப்பட்டவில்லை எனவே பள்ளியின் தலைமையாசிரியர் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தடையின்மை சான்று பெற்று ஜனவரி 31 க்குள் ஓய்வூ தியம் பெற்று வழங்க வேண்டுமென கூறினார்.மேலும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சத விகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகை யினை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத் திடுக 80 வயது துவங்கும் போதே கூடு தல் ஓய்வூதியர் 20 சதவிகிதம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1000 மருத்துவபடி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இரத்து செய்யப்பட்ட இரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும். ஆகிய கோ ரிக்கைகள் குறித்து எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அரசின் கொள்கை முடிவை சார்ந்ததாகும் எனவே இவையா வும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல் லப்படும் என தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.மாவட்ட ஆதிதிராவிடல் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் ஊராக வளர்ச்சி பிரிவு, உதவி கருவூல அலுவலகம், காவல் துறை, மாவட்ட கருவூலம், பள்ளிக்கல்வித்துஐற வேலூர் மாநகராட்சி துணை சுகாதார நலப் பணிப்பணிகள் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டு குறைகள் தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக