ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு 15 ஆயிரம் பேருக்கு சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 ஜனவரி, 2026

ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு 15 ஆயிரம் பேருக்கு சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து !














 ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு 15 ஆயிரம் பேருக்கு சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து !
வாணியம்பாடி, ஜன 1 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு 15 ஆயிரம் பேருக்கு சமுதாய நல்லிணக்க சம பந்தி விருந்து   ஒரே மேடையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வேடங்கள் அணிந்து பொதுமக்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்தனர். வாணியம்பாடி, ஜன.1- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடி அடுத்த ஆலங்காயம் மேற்கு ஒன்றி யம் திமுக சார்பில் மதனாஞ்சேரி கிராமத் தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினமான இன்று வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை சார்ந்த திமுக  உறுப்பினர்கள், தொண்டர் கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 15 ஆயிரம் பேருக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி. எஸ். ஞானவேலன் சார்பில் பிரியாணி தயார் செய்யப்பட்டு  பிரியாணி ,லெக் பீஸ் என 15 வகையான அறுசுவை  அசைவ விருந்து, வேட்டி மற்றும் புதிய ஆண்டிற்கான காலண்டர்கள் வழங்கி னார்.
இதில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் வேடமணிந்த கலைஞர்கள்  திமுக வினருக்கும் பொது மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித் தனர். மேலும் நையாண்டி, கரகாட்டம், ஓயிலாலாட்டம், நையாண்டி, பாட்டுக்கச் சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட திருப்பத்தூர் மாவட்டத் தை சேர்ந்த திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண் டனர்.இன்று புத்தாண்டு தினமான இன்று மதனாஞ்சேரி பகுதியில் உள்ள தளபதி அறிவாலயம் விழாக்கோலம் போன்று காட்சி அளித்தது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad