தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவலர் உடற்பயிற்சி கூடம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஜனவரி, 2026

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவலர் உடற்பயிற்சி கூடம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவலர் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

ஜன.02- தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து அவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் படி புதிதாக உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டது.

மேற்படி நிறுவப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தை (31.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad