திருப்பத்தூர் அருகே மது அருந்து இரு சக்கர வாகனத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட 4 பேர் கைது புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை !
திருப்பத்தூர்- ஜன.2-
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாராண்ட பள்ளி பகுதியை
சேர்ந்த முருகேஷ் குமார் (வயது 20) இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறு வனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் ஆங்கில புத்தாண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள் அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தின் சைலன்சரை கழட்டிவிட்டு அதிக சத்தத்து டன் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். இதனை முருகேஷ் குமார் தட்டி கேட்டுள்ளார் மதுபோதையில் இருந்த நான்கு வாலிபர்கள் சேர்ந்து முருகேஷ் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு பின்னர் அவர் வீட்டிற்கு சென்று நாற்காலி, அடுப்பு உள்ளிட்ட பொருட் களையும் சேதப்படுத்தி உள்ளனர்.மேலும் அந்த நான்கு பேரும் கையில் செங்கல், இரும்பு ராடு, தடி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள் ளது.படுகாயம் அடைந்த முருகேஷ்குமா ரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். முருகேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த வாலிபர்கள் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசேன் (வயது 18)இர்ஃபான்(வயது 21), ஆகாஷ் (வயது 21),அபிசேக்(வயது 23), உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட நபர்களை தட்டி கேட்ட வாலிபரை தாக்கி அவரின் வீட்டிற்கு சென்று பொருட் களின் சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்படுத்தியது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக