ஜன 24. நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைவர் எலிசபெத் ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார். இந்த விழா தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பம் ஆனது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். திருமதி லூயிஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கமான்டிங் ஆபிசர் அமித் ஆல்பர்ட தேசிய கொடியை ஏற்றினார். பின்பு தேசிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் நம் முன்னவர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
மாணவிகள் ஜோஹன்னா எஸ்தர் மற்றும் மேரி ஜாஸ்மின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவர்கள் குடியரசு தினத்தைப்பற்றியும், நம் தேசத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர்களைப் பற்றி, பேசியும், பட்டிமன்றம், நடனம், நாடகம் நடத்தியும் காட்டினர்.
இறுதியில் பள்ளி மாணவி மெலோஷா நன்றியுரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை உதவிமுதல்வர் மாரிதங்கம் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேசிய கீதம் முழங்க குடியரசு தினவிழா இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக