தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின விழா. தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தேசிய கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 440 அலுவலர்களுக்கு பாராட்டு நற்சான்று மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

38 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ ரவிச்சந்திரன் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad