தொழிற்சாலையில் விஷ வாழ்வு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு !
போரணாம்பட்டு , ஜன 26 -
வேலூர் மாவட்டம் தோல் கழிவுகளால் மாசுக்கு பெயர் பெற்ற பேரணாம்பட்டில் தனியார் தோல் தொழிற் சாலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு குடும்பத்தைக் காப் பாற்ற வயிற்று பிழப்பிற்கு தோல் தொழி ற்சாலை பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு இருவருக்கு அரசு வேலை மற்றும் இரண்டு கோடி ரூபாய் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி வழங்கிட பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு அருகே செயல் பட்டு வரும் தனியார் தோல் தொழிற் சாலையில் ஏற்பட்ட விஷவாயு தாக்கு தலில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பேரணாம்பட்டு நகரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. பேரணாம்பட்டு – ஆம்பூர் சாலை யில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்த மான தோல் தொழிற்சாலையில், கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வரும் தரைக்காடு பகுதியைச் சேர்ந்த ஷேக் அலி (58) மற்றும் ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்த சூப்பர்வைசர் ஜமால் பாஷா (வயது 41) ஆகிய இருவரும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோலை பதனிடுவதற்காக ரசாயனங்களை கலந்த பெரிய டிரம்மை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு திறக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக வெளியேறிய விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்ததாக கூறப் படுகிறது. உடனடியாக சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் மாவட் டம் உமராபாத் தனியார் மருத்துவமனை க்கு கொண்டு சென்ற நிலையில், மருத்து வர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்த தாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு டவுன் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகன், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசார ணை நடத்தி, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தைத் தொட ர்ந்து, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சி யர் சுபலட்சுமி, பேரணாம்பட்டு வட்டாட்சி யர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தோல் கழிவுகளால் மாபெரும் மாசுபாட்டுக்கு பெயர் பெற்ற பேரணாம்பட்டில், இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்வது மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கண்காணிப்பு அலட்சியமே காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இஇ சந்திரசேகரின் அலட்சியமான அணுகு முறையே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். பலமுறை புகார் கள் மற்றும் செய்தி வெளியீடுகள் அளிக் கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல், தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக வெளியேற் றப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் கடுமையாக பாதிக்கப் பட்டு ள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் கார ணமாக மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகள் பரவி வருவதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்களின் உயிர் பாதுகாப்பை விட நிறுவன வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மனித உயிர்க ளின் மீது சிறிதளவும் அக்கறை இல்லாத நிர்வாகம் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். “பறிபோன உயிர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இந்த நிறுவனமும் திரும்ப அளிக்க முடியுமா?” என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வயிற்று பிழப்பிற்கும் குடும்பத்தை நடத் தவும், தோல் தொழிற்சாலையில் பணி யில் சேர்ந்து பணியாற்றி வந்த நிலை யில் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இருவருக்கு அரசு வேலை மற்றும் இரண்டு கோடி ரூபாய் குடும்ப வாழ்வாதா ரத்தை மேம்படுத்தி உயர்த்த நிதி உதவி வழங்கிட, பாதிக்கப்பட்டவரின் குடும்பத் தினர் மத்திய மாநில அரசுக்கு கோரிக் கை வைத்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக