நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 77 ஆவது குடியரசு தின விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 77 ஆவது குடியரசு தின விழா.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 77 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெப ராஜன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மெர்சிராஜன் குரூப் ஆப் கம்பெனி இயக்குநர் சாமுவேல் கலந்து கொண்டு நாட்டின் தேசிய கொடியை ஏற்றினார்.

கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி வரவேற்புரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் உறுதிமொழி வழங்கினார். கல்லூரி பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன் தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெப ராஜன், முதல்வர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad