இந்திய திருநாட்டின்77 வது குடியரசுதின விழா நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் பட்டுராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார்.
தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்றார். தாளாளர் வழக்கறிஞர் டாக்டர் பிரபாகர் தலைமைதாங்கி தேசிய கொடியேற்றி உரையாற்றினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார்.
பட்டதாரி ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி, மாணவர்கள் ஜோசுவா சாம்துரை, சந்தோஷ் ஆகியோர் குடியரசு தினம் பற்றி பேசினர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
உதவி தலைமையாசிரியர் மெரிட்டன் சகரிராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக