குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் 77 வது குடியரசு தினம் கொண்டாடப் பட்டது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் 77 வது குடியரசு தினம் கொண்டாடப் பட்டது !

குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் 77 வது  குடியரசு தினம் கொண்டாடப் பட்டது !
குடியாத்தம் ஜன 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
 அத்தி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சொந்தராஜன் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என கேட்டுக் கொண் டார்  . அத்தி கல்விக் குழுமத்தின் அறங் காவலர் டாக்டர் சகாநாதன் சொந்தர ராஜன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து  மாணவர்கள் ஆகிய நீங்கள் மொழிகளை தேர்ந்தெடுத்து அறிவை வளர்த்து கொண்டு  தாங்களாகவே  சிந்திக்க கற்றுக்கொண்டு வாழ்வில்  முன்னேறவேண்டும்   என கேட்டுக் கொண்டார் .  மேலும் மருத்துவர்கள்
திவ்யா சுகநாதன் அவர்கள் அரசிலமைப் பின் முக்கியத்துவத்தையும் அதை கடைப் பிடித்தலையும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார் . மேலும் அத்தி மருத்துவ மனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி அவர்கள், குடியாத்தம் பாலிடெக்னிக்           கல்லூரி முதல்வர் k . குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ்  சீனித்துரை மற்றும் மருத்துவ நிர்வாக அலுவலர்  சரணவன் ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள். அத்தி கல்லூரியின் மாணவர்கள் சிறப்பு  யோகா சனம் செய்து காட்டியும் , குடியரசு தின சிறப்பு பேச்சு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த bnys மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது .  இதில்  மருத்துவர்கள் , செவிலியர்கள்  , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு குடியரசு  தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள் .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad