திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் 7-1-2026 அன்று கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்களின் உயிர் காக்கும் விதமாக முக்கியமான சேவை பணியாக 5-1-2026 அன்று காலை சங்க தலைமை செயலகத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் ஸ்ரீ குமரன் மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தன் னார்வலர்கள் சங்க உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் இரத்ததானம் செய்தவர்களை பாராட்டி சான்றிதழ்கள் சங்க நிறுவன தலைவர் ஜி. கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் வழங்கினார் மேலும் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் ரூ 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டன இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதிக அளவில் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்
இரத்த அளவை சரியாக வைத்திருக்க வேண்டும் ஒரு யூனிட் ரத்தம் இரண்டு உயிர்களை காப்பாற்றும் போன்ற விழிப்புணர்வு செய்திகளை மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியினை தலைமை சங்கத் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
மாவட்ட செய்தியாளர்
அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக