தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், மொத்தம் தலைவர் பீட்டர் தலைமையில், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தமிழக முதல்வரை தேர்தல் கால வாக்குறுதி படி சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்து, 


சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்தாமல் மேல் முறையீடு செய்ய அறிவுறுத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களின் நடவடிக்கையை கண்டித்தும்,


தொழிற்சங்கங்களையும் சங்க நிர்வாகிகளையும் கொச்சை ப்படுத்துவது நியாயமா.?


2003 அரசு ஊழியர் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசி வரும் அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் நடவடிக்கையை கண்டித்தும்


மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி திமுக அரசை கண்டித்து கருப்பு  கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கோட்டைச் செயலாளர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வட்டக்கிளை செயலாளர் ராஜு, வட்டக் கிளை செயலாளர் நவீன், பாலராஜசேகர், பெரியசாமி, தமயந்தி, செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி, ரமேஷ், ஜெகதீஷ் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad