“உலகம் உங்கள் கையில்” திட்டம் தொடக்கம் – கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

“உலகம் உங்கள் கையில்” திட்டம் தொடக்கம் – கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்


“உலகம் உங்கள் கையில்” திட்டம் தொடக்கம் – கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

திருப்பூரில் 1441 மாணவர்களுக்கு ரூ.5.90 கோடி மதிப்பில் லேப்டாப் விநியோகம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு முதல் கட்டமாக மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் லட்சுமி மஹாலில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் இணைந்து 1441 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.90 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்றது. 


இதில் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.


விழாவில் அமைச்சர் பேசியபோது:-


தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மூலம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.



மாணவர்கள் நவீன உலகத் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெறும் வகையில் “உலகம் உங்கள் கையில்” என்ற கருப்பொருளில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.


 திருப்பூர் மாவட்டத்தில் தலா ரூ.40,985 மதிப்பில் மொத்தம் 1441 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவியர்கள் 732 பேருக்கும், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 709 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கமித்திரை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோன்மணி, உதவி இயக்குநர் சதீஸ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், திமுக மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி துறை சந்திரசேகர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி தாராபுரம் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.கே. துரைசாமி, தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம். உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad