நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த வடிவீஸ்வரம் துணை தபால் நிலையம் நிர்வாக காரணங்களுக்காக மூடப்படுவதாக கூறி நாகர்கோவில் டவுன் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுவதாக தபால் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இச் செயலால் தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்கள் அண்ணா பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் இருந்து வந்த தபால் நிலையத்தை தான் பொதுமக்கள், முதலீட்டாளர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் தபால், சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பயன் படுத்தி வந்தனர்.
தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள தபால் நிலையம் இருக்கும் இடம் தொலைவில் உள்ளதால் பல்வேறு ஊர்களில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வந்து இறங்கிய பின்னர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள காரணத்தால் முக்கிய போக்குவரத்து மையத்தில் (அண்ணா பேருந்து நிலையத்தில்) இருந்து வந்த தபால் நிலையம் மூடப்பட்டு உள்ளதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து வந்த தபால் நிலையத்தை அதே இடத்தில் மீண்டும் பொது மக்கள் நலன் கருதி உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில் காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் பொது மக்களை திரட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக