ஜன.3- தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே திம்மராஜபுரத்தை சேர்ந்த தமிழரசி (45) இவர் தனது மகன் மதன் குமார் (25) இருவரும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வாகைகுளம் டோல்கேட் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த இன்டேன் ஆயில் டேங்கர் லாரி, இருசக்கர வாகனத்தில் மீது மோதி பின்னால் இருந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக