தமிழ்நாடு அரசின் உறுதியப்பு ஓய்வூதிய திட்டம் வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் வரவேற்பு !
வேலூர் , ஜன 3 -
வேலூர் மாவட்டம் தமிழ் நாடு அரசின் உறுதியப்பு ஓய்வூதிய திட்டம் வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் வரவேற்பு இன்று தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 20 ஆண்டு கால கோரிக்கைளுக்கு அரசு ஊழியர் ஆசிரியர் நலனை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்து வரும் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்க கூடிய புதிய திட்டமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திடிடத் தினை அறிவித்துள்ளார்கள் இந்த அறிவிப்புகள் குறித்து வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ பேரமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மாநில அரசு அலுவலர் கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய மாக வழங்கப்படும் என்றும் இதற்கென பணியாளர்களின் 10 சதவீத பங்களிப் போடு ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதை யும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் மேலும் பணிக்கொடை அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படும் என்றும் தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும், 01.04.2003க்கு பின் இத் திட்டம் அமலாகும் வரை ஓய்வூதியமின்றி ஓய்வு பெற்றவர் களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பி னை நாங்கள் மனதார வரவேற்கின் றோம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய ர்களின் நலனையும் அவர்களின் குடும் பத்தின் நலனையும் மனதில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறை வேற்றி புதிய அறிவிப்பினை வெளி யிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனதார வரவேற்பினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின் றோம்.
இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வாளகத்தில் நடை பெற்ற அவரச கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ பேரமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனத யாளன், மாநில தலைமைக்குழு உறுப் பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த் தனன், உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தஜோதி, தமிழ்செல்வன், பிரகாஷ், நீலகண்டன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயகுமார், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வ குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் க.குணசேகரன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப்அன்னையா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்
பின்னர் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் செய்தியாளர்களை சந்த்திது பேசினர் அப்போது மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் நலனையும் மனதில் கொண்டு தொலைநோக்குப் பார்வையு டன் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ் நாடு அரசுக்கும் மனதார வரவேற்பினை யும் நன்றியினையும் தெரிவித்துக் கொள் கின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதிய அறிவி ப்பை ஏற்று ஜனவரி -6 முதல் அறிவிக்கப் பட்ட வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக