வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இர்ஃபான் போக்சோ சட்டத்தின் கீழ் கைது !
வாணியம்பாடி , ஜன 3 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இர்ஃபான் போக்சோ சட்டத்தின் கீழ் கைது பாலியல் வன் கொடுமைக்கு உடைந்தயாக இருந்த சிறுமியின் தாயும் கைது செய்து சிறையில் அடைப்பு புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீ சார் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தஜபியுல்லா இவருக்கு கதீஜா ஜல்(வயது 38) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 4 பிள்ளைகள் உள்ள நிலையில், கதீஜா நடத்தை சரி இல்லாததால் கடந்த 1 வருட த்திற்கு முன்பு விவகாரத்து நடை பெற் றது இந்நிலையில் கதீஜா முஸ்லிம்பூர் பகுதி குண்டு முஹம்மத் இப்ராஹிம் தெருவில் பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது கபூராபாத் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் இர்ஃபான் (இவருக்கு திரு மணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளன)
இர்ஃபான் கதிஜாவை சந்திக்க அடிக்கடி அவருடைய வீட்டிற்கு சென்று வருவதும், அவருடன் தனிமையில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.கதீஜாவின் மகள் 7 ஆம் வகுப்பு மாணவி உடன் இர்ஃபானுக்கு தொடர்பு ஏற்பட்ட சிறுமியை வெளியில் அழைத்து சென்றுள்ளார்.இது குறித்து கதீஜா முன்னாள் கணவர் ஜபியுல்லாவை தொடர்பு கொண்டு மகள் காணவில்லை என்று கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை ஜபியுல்லா சம்பவம் குறித்து வாணியம்பாடி அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் இர்ஃபான் மற்றும் சிறுமியின் தாய் கதிஜாவை கைது செய்து விசார ணை மேற்கொண்டதில் இர்ஃபான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தும், அதற்கு சிறுமியின் தாய் உடைந்தை யாக இருந்ததை விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த இர்ஃபானுக்கு போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உடைந்த யாக இருந்த சிறுமியின் தாய் கதீஜாவை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். வாணியம் பாடி யில் தாய் மற்றும் மகளுடன் உறவு வைத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக