குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்!
குடியாத்தம் ,ஜன 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் .சீவூர்
ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர் மற்றும் முருகன் நகர் பகுதிகளில் சுமார் 1000. மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப் பகுதியில் பல ஆண்டு களாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சித் தலைவ ரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ள னர் . ஆனால்இன்று வரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாததால் இன்று காலை சுமார் 75க்கு மேற்பட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்த மாக அதிகாரிகள். பேச்சுவார்த்தை நடத்தி. விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக