கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழா.

கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழா

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகராட்சி தலைவர், நகர திமுக செயலாளர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். தென்குமரி கல்விக்கழக செயலாளர் பி.டி.செல்வகுமார் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், நகராட்சி கவுன்சிலர்கள் பூலோகராஜா, ஆட்லின், இக்பால், ராயப்பன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், நகர இளைஞரணி செயலாளர் சின்னமுட்டம் ஷ்யாம், நகர திமுக நிர்வாகிகள் நாகராஜன், பி.ஆனந்த், ரூபின், பிரைட்டன், அருண், வேலு மற்றும் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad