ஜன. 10, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள எம்டிஏ காலனியில், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 84.50 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேக "மகளிர் பூங்கா" அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிங்க் பூங்காவை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பூங்காவில் யோகா பயிற்சி கூடம், ஸும்பா, இறகு பந்து மைதானம், குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இப்பூங்காவை திறந்தவுடன் அதில் பெண்கள் பலர் ஆர்வத்துடன் பயிற்சி செய்ய தொடங்கினர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக