குடியேற்றம் தமிழ் சங்கத்தில் புதிய நிர் வாககள் பதவி ஏற்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியேற்றம் தமிழ் சங்கத்தில் புதிய நிர் வாககள் பதவி ஏற்பு விழா!

குடியேற்றம் தமிழ் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா! 
குடியாத்தம் ,ஜன 25  - 


வேலூர் மாவட்டம் குடியேற்றம் தமிழ் சங்கத்தின் செயற் குழு கூட்டம் ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் இன்று ஞாயிற்று க்கிழமை 25 /1/ 2026 காலை 10:30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. 
10.2.1985 அன்று குடியேற்றம் தமிழ் சங்கத்தை குழந்தை கவிஞர் நீல கணேசன் நிறுவினார்.புலவர் காசிநாதன் தலைவராகவும்,புலவர் ஜெகதீஸ்வரன் பொருளாளராகவும், முனைவர் பா. சம்பத் குமார் 25 ஆண்டுகளாக செயலா ளராக வும் தமிழ் சங்கத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர் நிறுவனர் மற்றும் தலை வர் மறைவால் புதிய நிர்வாகிகள் செயற் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத் தில் கே எம் ஜி கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் தமிழ் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணை தலைவராக வழக்கறிஞர் கே எம் பூபதி, காப்பாளராக ஜே கே என் பழனி, ஒருங்கிணைப்பாளர்களாக எம் என் ஜோதி குமார், தொழிலதிபர் குமரகுரு, நீலத்திரு அரவிந்த் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக செந்தமிழ் கூத்தன், ருத்ரமூர்த்தி, ராஜேஸ்வரி அம்மாள், விஜயலட்சுமி ராமமூர்த்தி, ஜமுனா சம்பத்குமார்? கீதாலக்ஷ்மி  ஆகியோரும்,  துணைச்  செயலாளர்களாக இரா பாஸ்கர், பேராசி ரியர் விநாயகர் மூர்த்தி, ஆசிரியர் கமல ஹாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் களும் ,மூத்த பொறுப்பாளர்களும் வாழ்த் துரை வழங்கினர். பொதுச் செயலாளர் முனைவர் பா சம்பத்குமார் வரவேற்புரை வழங்கினார் பொருளாளர் புலவர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad