திருப்பத்தூர் நகர மாணவரணி சார்பில் சுலோ சைக்கிளிங் போட்டி அசத்திய நகர செயலாளர்கள் மற்றும் நகர மன்ற தலைவர்!
திருப்பத்தூர், ஜன 11 -
திருப்பத்தூர் மாவட்டம் திமுக நகர மாணவரணி சார்பில் சுலோ சைக்கிள் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர செயலாளர் மற்றும் நகர தலைவர் தமிழக முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திரு விழா வை முன்னிட்டு நகர மாணவரணி சார் பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மாணவரணி சார்பில் சார் ஆற்றல் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மாபெரும் ஸ்லோ சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.இதில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா, அதேபோல திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஸ்லோ சைக்கிளிங் போட்டி யில் சைக்கிள் ஓட்டினர். அப்போது எதிர் பாராதவிதமாக ஆங்காங்கே கால்களை ஊன்றி மெதுவாக சைக்கிள் ஓட்டி சிரிப் பலையை ஏற்படுத்தினர். மேலும் ஸ்லோ சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மாணவரணி அமைப்பாளர் தினகரன், நகர மாணவரணி துணை அமைப்பாளர் விஜய், மணிகண்டன். ராகுல். கிஷோர். ஸ்ரீதேவி மற்றும் தேர்தல் பார்வையாளர் ரமேஷ். பொதுக்குழு உறுப்பினர் ரகுநாத். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதி ராஜ். நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்தன். மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப் பாளர் பொன் நாகராஜ் நாகு. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சார்லஸ் நவீன் குமார். ஐ டிவி சிவா. சதீஷ்குமார் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக