தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே நேற்று, கிருஷ்ணகிரியில் இருந்து பூக்களை ஏற்றி வந்த சுமை வாகனம், தூத்துக்குடி செல்லும் வழியில் நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில், வாகனத்தில் இருந்த தனுஷ் மற்றும் கிளீனர் மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக