குடியேற்றம் திருவள்ளுவர் தின பேரவை சார்பில் ரோட்டரி சங்கம் சார்பில் கொண் டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 ஜனவரி, 2026

குடியேற்றம் திருவள்ளுவர் தின பேரவை சார்பில் ரோட்டரி சங்கம் சார்பில் கொண் டாட்டம்!

குடியேற்றம்  திருவள்ளுவர் தின பேரவை சார்பில் ரோட்டரி சங்கம்  சார்பில் கொண் டாட்டம்!
குடியாத்தம் , ஜன 16 -

வேலூர் மாவட்டம் குடியேற்றம் உலகத் திருவள்ளுவர் பேரவை சார்பில்  திரு வள்ளுவர் தினம் ரோட்டரி சங்க கட்டி டத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் வைர. ஜே. அன்பு தலைமை தாங்கினார். பேரவையின் செயலாளர் பேராசிரியர் முனைவர் பா. சம்பத்குமார் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து ராம இளங்கோவன் திருவள் ளுவர் படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். குடியேற்றம் ரோட்டரி சங்க தலைவர் சந்திரன் பொருளாளர் ஜெயச்சந்திரன் முன்னாள் இன்னர் வீல் சங்க தலைவிகள் சரளா ஆனந்த் ராதா அண்ணாமலை உடற்கல்வி இயக்குனர் பொன் புனிதா ராம இளங்கோவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது போட்டியில் 369 பேர் கலந்து கொண்டனர் முதல் மூன்று பரிசுகளும் 26 சிறப்பு பரிசுகளும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது கோலப்போட்டி நடுவர்களாக திருமதி ஜெயபாரதி அன்பு திருமதி ஜமுனா சம்பத்குமார் திருமதி ரேவதி ஜெயக்குமார் இருந்தனர் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் திருக்குறள் அதிகார வரிசையாக திருக்குறள் ஒப்புவித்தல் செய்தனர். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் கௌதம்ஓம் சக்தி ஜீவா ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் புலவர் முகமது அலி கவிஞர் மோகன் பைசல் ஓவிய ஆசிரியர் சபீர் ஆகியோர் செய்திருந்தனர் நிகழ்ச்சியை ஆசிரியர் தபசும் தொகுத்து வழங்கினார் நிறைவாக பேரவை பொருளாளர் அரங்க ஜெயகுமார் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad