திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார் அப்பொழுது அருகில் இருந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ராஜகுமாரி உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார் ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் ஜான் மற்றும் காவலர்கள் உதவி செய்தனர் உடனடியாக ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் உதவி ஆணையர் ஜான் மற்றும் காவலர்கள் வயதான பெண்மணி தூக்கி ரோந்து வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தனியார் மருத்துவமனை செவிலியர் ராஜகுமாரி மற்றும் காவல்துறையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக