திருப்பூர் மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜனவரி, 2026

திருப்பூர் மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் சார்பாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது


அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவானது திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி V. ஜெயராமன் MLA, மற்றும்திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் K. N விஜயகுமார் MLA ஆகியோரது வழிகாட்டுதலின் படி மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின்  சார்பாக (17/1/2026) அன்று மேற்கண்ட தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.குணசேகரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது, 


இவ்விழாவிற்கு 15 வேலம்பாளையம் பகுதி கழகத்தின் செயலாளர்  வெ.அ. கண்ணப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் A.M சதீஷ், மாவட்ட பிரதிநிதி T. சிவக்குமார், வேலம்பாளையம் பகுதி கழக மீனவரணி செயலாளர் R.கௌரி சங்கர், பகுதிகழக பொருளாளர் V. ரகுராமன், மாவட்ட பாத்திர தொழிற்சங்கத்தின் இணை செயலாளர் B.விஜயகுமார், பாத்திர தொழிற்சங்கத்தின் துணை செயலாளர் S. கேசவமூர்த்தி 10வது வட்டக் கழகத்தின் செயலாளர் V. செந்தில் இஸ்ம்க் இளைஞர் அணி மாவட்ட தலைவர் யுவராஜ், வர்த்தக அணி பொருளாளர் D. ஈஸ்வரமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற தலைவர் S. சிவகுமார் பகுதிகழக மாணவரணி செயலாளர் சூரிய பிரகாஷ், பகுதிகழக மாணவரணி தலைவர் அருண் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் இவ்விழாவில்  கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.

மாவட்ட செய்தியாளர் அ. காஜமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad