ஜன.27- தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி நட்டார் அம்மன் (நட்டார் கொண்ட அம்மன்) கோயிலுக்கு 2026 கும்பாபிஷேக விழா ஏரல் நட்டார் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், திங்கட்கிழமை, ஜனவரி 26ம் தேதி மற்றும் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 28ஆம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகத்திற்கான மாலைகள் மற்றும் மலர் அலங்காரங்களை 50க்கும் மேற்பட்டோர் செய்தனர் .
மேலும் இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நேற்று காலை, புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு , கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக