திருப்பூரில் முஸ்லிம் விடுதலைக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பு தொடக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜனவரி, 2026

திருப்பூரில் முஸ்லிம் விடுதலைக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பு தொடக்கம்

Ll

வரலாற்று மீட்சியே! வாழ்வியல் நீட்சி!!” என்ற பெரும் முழக்கத்துடன் முஸ்லிம் விடுதலைக் கழகம் என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனத் தலைவர் திருப்பூர் மஜீத்  அறிவித்துள்ளார் 


திருப்பூர் காங்கேயம் ரோடு தனியார் மண்டபத்தில் முஸ்லிம் விடுதலை கழகம் சார்பில் திருப்பூர் மஜீத் கூறுகையில் 

ஜனநாயக வழியில் மக்கள் பணியாற்றும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்தேச விடுதலைக்காக தமது உடல், பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த முஸ்லிம் சமூகம், இன்றைய சூழலில் சொந்த நாட்டிலேயே மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதும், அவர்களின் தியாக வரலாறு மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு, சிதைக்கப்படுவதும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம் சமூகம் அனைத்தையும் இழந்து அடித்தள நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர் இந்த நிலையை மாற்றி சமூகத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை மீட்டெடுப்பதே அமைப்பின் பிரதான கொள்கை முழக்கம் என கூறினர்

வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கு வழக்கம்போல் சம்பிரதாயத்திற்காக ஒன்று இரண்டு இடங்கள் மட்டுமே வழங்காமல் உரிய அங்கீகாரம் அளித்து அதிக தொகுதிகளை ஒதுக்கி தமிழக சட்டப்பேரவையில் வலுவான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என முஸ்லிம் விடுதலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad