கன்னியாகுமரி - மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

கன்னியாகுமரி - மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்.

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நேற்று நடைபெற்றது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நன்னடத்தைப் பிணை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் 
தொடர் குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு முக்கியத்துவம் 
போதை பொருள் குட்கா சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்காணித்தல் 
போகோ வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் 
காவல் நிலையம் வரும் பொது மக்களுக்கு இருக்கை மற்றும் குடிதண்ணீர் வசதி உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார் 

டிசம்பர் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். 

அதனை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன் மற்றும் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் வேலம்மாள் , உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad