குளச்சலில் சிறுவன் ஓட்டிய பைக் பறிமுதல் பைக் உரிமையாளர் பெண் மீது வழக்கு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

குளச்சலில் சிறுவன் ஓட்டிய பைக் பறிமுதல் பைக் உரிமையாளர் பெண் மீது வழக்கு.

குளச்சலில் சிறுவன் ஓட்டிய பைக் பறிமுதல் பைக் உரிமையாளர் பெண் மீது வழக்கு.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2-மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். 

அந்த பைக் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கு சொந்தமானது. இதையடுத்து, சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதி அளித்த பைக் உரிமையாளர் கீழ்க்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சு (25) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad