நெமிலி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட் பட்ட சயனபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமையில் சமத்துவப் பொங்கல்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

நெமிலி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட் பட்ட சயனபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமையில் சமத்துவப் பொங்கல்!!

நெமிலி  ஊராட்சி ஒன்றியத் திற்கு  உட் பட்ட  சயனபுரம் ஊராட்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமையில்  சமத்துவப் பொங்கல்!!
ராணிப்பேட்டை , ஜன 14 -

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சயன புரம் ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி, ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடி வேலு அவர்கள் தலைமையில் நடை பெற்றது.இவ்விழாவில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலிட்டு, தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட் சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப் பான மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.
மேலும், சயனபுரம் ஊராட்சியில் பணிபுரி யும் துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேநீர் தேக்கத் தொட்டி இயக் குபவர் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிப் பணியாளர்களுக்கும், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் போனஸ் பரிசு தொகையினை வழங்கி னார்.இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிப் பணியாளர் கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் என அனைவரும் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad