செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் !
திருவண்ணாமலை , ஜன 14 -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மிகச் சிறப்பான முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
செங்கம் வட்டாட்சியர் திரு. முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒரு சிறப்பம்சமாக வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியா ளர்கள் வரை அனைவரும் ஒரே மாதிரி யான சீருடை அணிந்து சமத்துவ பொங் கல் விழா நடைபெற்றது. இது அங்கிருந் தவர்களிடையே மிகுந்த ஒற்றுமையை யும், சமத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு முறைப்படி பொங்கல் வைக்கப் பட்டது. பானையில் பொங்கல் பொங்கி வரும் வேளையில், அங்கிருந்தஅரசுப் பணியாளர்கள் அனைவரும் "பொங்க லோ பொங்கல்!" என உற்சாக முழக்க மிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.விழாவின் ஒரு பகுதியாக, வட்டாட் சியர் அவர்களுக்கு மலர் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் தாளத்திற்கு ஏற்ப நடனமாடி இனிப்பு களை வழங்கி கொண்டாடினார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக