பொங்கல் திருநாள் - களைகட்டும் ஏரல் காய்கனி சந்தை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

பொங்கல் திருநாள் - களைகட்டும் ஏரல் காய்கனி சந்தை.

பொங்கல் திருநாள் - களைகட்டும் ஏரல் காய்கனி சந்தை. 

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கி வருவது ஏரல் நகரம்.

இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.

அதுபோல பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளான இன்று 14.01.2026 சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

ஏரல் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஏரல் பகுதிக்கு வருவது வழக்கம். இன்றும் அதே போல ஏரல் பகுதிக்கு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் சந்தை பகுதியில் நெருக்கடியான நிலை ஏற்பட்டது.
ஏரல் காந்தி சிலை முதல் பிரதான கடைவீதி வரை அனைத்து இடங்களிலும் மக்கள் வெள்ளம் மிகுந்து காணப்பட்டது. 
காவல்துறையினர் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரி செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக குரல் செய்தி குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad