தெருநாய்களின் தாக்குதல் சம்பவம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது கண்டன அறிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 ஜனவரி, 2026

தெருநாய்களின் தாக்குதல் சம்பவம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது கண்டன அறிக்கை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது விடுத்துள்ள கண்டன அறிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற தெருநாய்களின் தாக்குதல் சம்பவம், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் கடும் அலட்சியத்தையும் நிர்வாகத் தோல்வியையும் வெளிப்படுத்தும் மிகுந்த கவலையளிக்கும் நிகழ்வாகும்.

12 குழந்தைகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை, மனித உயிர்களின் பாதுகாப்பில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை வெளிப்படையாக உணர்த்துகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தபோதும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தத் தீர்மானமான, நிரந்தர நடவடிக்கையும் எடுக்காதது கடுமையான கண்டனத்திற்குரியது.

இந்த நிர்வாக அலட்சியத்தின் விளைவாக இன்று குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ரேபீஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் அபாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்
ஆகியோர் உடனடியாக தலையிட்டு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற ஆணைகளுக்கு உட்பட்டு, Animal Birth Control (ABC) விதிமுறைகளின்படி, தாக்குதல்மிகுந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள தெருநாய்களை மனிதநேயமான முறையில் பிடித்து, தனிமைப்படுத்தி, உரிய மருத்துவ கண்காணிப்புடன் பாதுகாப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் முழுவதும் விரிவான தெருநாய் கணக்கெடுப்பு நடத்தி, தடுப்பூசி, கருத்தடை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர மற்றும் வெளிப்படையான செயல்திட்டம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசும் குமரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நிறைவேற்றத் தவறினால்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி – சார்பில், நாடு முழுவதும் பெரும் திரளான மக்களை ஒன்று திரட்டி, சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உட்பட்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார் .

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad