ஏரலில் பஸ் மறியல் - பேருந்து நிலையத்தில் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஏரலில் பஸ் மறியல் - பேருந்து நிலையத்தில் பரபரப்பு.

ஏரலில் பஸ் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

இன்று காலை 9 மணி அளவில் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் டவுன் முன்புறம் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்

ஏரல் பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பள்ளியில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. 

அப்பள்ளியில் ஏரல் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவிகள் படித்து வந்தனர் தற்போது விரிவாக்க பணியின் காரணமாக சிறுத்தொண்ட நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் காலை ஏரல் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ்ஸில் பள்ளி மாணவிகள் சென்று வந்துள்ளனர் ஆனால் பேருந்தோ சரியான நேரத்தில் வருவதும் இல்லை போவதுமில்லை என்று மாணவிகள் புகார் கொடுத்து வண்ணம் உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் அப்ப பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறந்து வைத்து சீக்கிரமாக பள்ளி மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர். 

தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad