வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஜனவரி, 2026

வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு!

வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு!
குடியாத்தம் ,ஜன 2 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேளாண் மை உற்பத்தியாளர்கள் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் மாநில செயற் குழு உறுப்பினர் சரகுப்பம் திரு மு.சேகர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் சங்கம் பிரதிநிதிகள் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக்கள் பறிமாறிக் கொண்டனர்
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் சூராளூர் பா.ஆணந்தன், மாவட்ட செயலா ளர் கொட்டாவூர் சிவாஜி, மாவட்ட இணை செயலாளர் உப்பரபள்ளி ஏ.சி பாபு நாயுடு, மாவட்ட இளைஞர் அணி தலைவர் லட்சு மணன், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் மேல்முட்டுக்கூர் ஷிறிதர், அணைக்கட்டு ஒன்றிய தலைவர் மேலரசம்பட்டு கோ. செந்தாமரை, அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் மேலரசம்பட்டு மகேந்திரன், காப்பீட்டு அணி எல்.ஐ.சி.பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad