தாராபுரம் தளவாய் பட்டினத்தில் மஞ்சுவிரட்டு காளைகளை வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

தாராபுரம் தளவாய் பட்டினத்தில் மஞ்சுவிரட்டு காளைகளை வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள்


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தளவாய்பட்டிணம் கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு திருவிழா போட்டிகளில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு  குக்கர் அண்டா தட்டுக்கள்   கடிகாரம்  ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தாராபுரம் பகுதியில் கடந்த 100, வருடங்களாக  வட மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் மஞ்சுவிரட்டு குழுவினர் மற்றும் தளவாய்பட்டிணம் ஊர் பொதுமக்கள் சார்பில் குழுவின் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு விழாவில் தமிழனின் பாரம்பரியம் மிக்க தமிழர் திருநாளாம் தைத்திருநாளை அலங்கரிக்கும் வகையில் தளவாய் பட்டிணம் அண்ணா திடலில்  தினங்களில் வட மஞ்சுவிரட்டு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டு பல் அதற்கு மேல் உள்ள மாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் வால் எடுக்க கொம்பு பிடிக்க அனுமதிக்கப்படவில்லை, மாட்டின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அனுமதி மறுக்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்து விழாவில் அனுமதிக்கப்பட்டனர் மது அருந்தியவர்கள் மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை, தாராபுரம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள தளவாய் பட்டிணம் செலாம்பாளையம், கள்ளிவலசு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து


 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண வந்திருந்தனர். 


  வட மஞ்சுவிரட்டு விழாவில் திருப்பூர்,கரூர்,தேனி, மதுரை திண்டுக்கல்,பொள்ளாச்சி, உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 80- மாடுபிடி வீரர்கள் பங்கு பெற்றனர். மேலும் இன்று நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  காளைகள் முட்டியதில்  2,பேர் லேசான காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்ற சில காளைகள் பாய்ந்து வந்து வீரர்களை சிதறடித்ததுடன் அங்கும் இங்குமாக திரும்பி வேடிக்கை காண்பித்தன. காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும்  பரிசுப் பொருள்கள் விழாக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டன.



 பாதுகாப்பு பணியில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad