அலங்கியம் பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் பொங்கல் விழா, பாமகவினர் உற்சாக பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

அலங்கியம் பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் பொங்கல் விழா, பாமகவினர் உற்சாக பங்கேற்பு.



70-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


இந்த பொங்கல் விழாவை திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பாமக அலங்கியம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் முகைதீன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக, திமுக, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பொங்கல் விழாவை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

டம்ளரில் பலூன் ஊதி எடுத்துச் சென்று மற்றொரு இடத்தில் வைத்து வரும் விளையாட்டு,

பேண்டின் மேல் கையைத் தொடாமல் ஜட்டி போடும் விளையாட்டு,

மெதுவான சைக்கிள் ஓட்டப் போட்டி,

உரியாட்டம்,

சாக்கு ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


மேலும் வன்னியர் சங்க பாடலுக்கு ஏற்ப சிறுவர், சிறுமியர்கள் நடனம் ஆடினர்.

சினிமா பாடல்களுக்கு ஏற்ப ஒலி, ஒளி அமைப்புடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சிறுவர்கள் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.


மொத்தமாக 70-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில், போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் வன்னியர் சங்கம் சார்பில் நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.


இந்த பொங்கல் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad