திருவள்ளூர் மேல் நிலைப் பள்ளியில் கம்பன் கழகம் 13 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் பங்கேற்பு !
குடியாத்தம் ,ஜன 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் கம்பன் கழகம் 13ம் ஆண்டு விழா நடை பெற்றது. கம்பன் கழக நிறுவனத் தலை வர் கே எம் ஜி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.நிறுவனர் ஜே கே என் பழனி வரவேற்றார் கம்பன் கழக செயலாளர் கே எம் பூபதி தொடக்க உரையாற்றினார் இணை செயலாளர் தமிழ் திருமால் அறி முக உரை நிகழ்த்தினார் விஐடி துணைத் தலைவர் ஜி வி செல்வம் சிறப்புரையாற் றினார் சென்னை குரோம்பேட்டை கம்பன் கழக செயலாளர் பத்மா மோகன் திருப் பத்தூர் கம்பன் கழக அமைப்பாளர் ஆர் ஆர் மோகன் ஆகியோருக்கு கம்பர் மாமணி விருதுகள்ளை வழங்கினார்.
இரவு 7 மணி அளவில் கம்பன் பெரிதும் வழிகாட்டி நிற்பது வீட்டுக்கா அல்லது நாட்டு என்ற தலைப்பில் ராஜபாளையம் கவிதா ஜவகர் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் வீட்டுக்கே என்ற தலைப்பில் கடையம் ராஜராஜேஸ்வரியும் பெருந்துறை ரவிக்குமார் ஆகியோர் நாட்டுக்கே என்ற தலைப்பிலும் சென்னை சேர்ந்த நித்திய பிரியா நாகர்கோயிலை சேர்ந்த . ராஜகுமாரும் பேசினார்கள் புலவர் வே பதுமனார் வாழ்த்துரை வழங்கினார் நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்லூரி தலைவர் கே எம் ஜி சுந்தர வதனம் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் கம்பன் கழக. புரவலர்கள். வி ராமு எஸ் அருணோதயம் டி ராஜேந் திரன் என்.இ கிருஷ்ணன் சி கண்ணன் ஜீ தமிழ் செல்வி. என் எஸ் குமரகுரு டி எஸ் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கவிஞர் பா சம்பத்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
இறுதியில் கம்பன் கழகப் பொருளாளர் கே இ எம் சிவகுமார் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக