43 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

43 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

 43  ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! 
திருப்பத்தூர் , ஜன 19

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த  பெரியகசி நாயக்கன் பட்டி கிராமத்தில், பொங்கல்  திருநாளை முன்னிட்டு பாரம்பரியத்தை போற்றும் விதமாக 43-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கோலாகலமாக நடை பெற்றது.திங்கள் கிழமையன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த விழா வில், ஊர் பொதுமக்கள், கிராம மூத்தோர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் எருது விடும் போட்டி சிறப்பாக நடை பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய விழா, கிராம மக்களின் ஒற்றுமையையும், தமிழர் வீர விளை யாட்டு மரபையும் வெளிப்படுத்தும் வகை யில் அமைந்தது. இந்த எருது விடும் திரு விழாவில் பங்கேற்ற காளைகள் அனைத் தும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், கால்நடை மருத்துவர்களால் முழுமை யான மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தப் பட்ட பின்னரே போட்டியில் அனுமதிக்கப்பட்டன.  காளைகளின் உடல் நலம், பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பு ஆகியவை முதன்மை கருத் தாக கொண்டு விழா நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, கிருஷ்ணகிரி,  திருவண்ணா மலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களிலிருந்தும், மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் 200க் கும் மேற்பட்ட சிறந்த இனக் காளைகள் இந்த விழாவில் பங்கேற்றன. மொத்த மாக 300க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இதனை காணவும், போட்டியில் பங்கேற் கவும் 2,500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கிராமத்தில் திரண்டதால், பெரியகசிநாயக்கன்பட்டி கிராமம் விழாக் கோலமாக காட்சியளித்தது. கிராமம் முழு வதும் பாரம்பரிய இசை, முழக்கங்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாக ஆர வாரம் நிறைந்திருந்தது. இந்த எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மொத் தம் 81 பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூபாய் 77,777 வழங்கப்பட்டதுடன், பல்வேறு மதிப்புள்ள பரிசுகள் வழங்கப் பட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விழா நடைபெறும் நேரம் முழுவதும் பாது காப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருந் தன. ஜோலையார்பேட்டை காவல் நிலை யத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பாக விழாவை நடத்தினர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை. செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad