மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசு கண்டித்து தர்ணா போராட் டம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடி யாத்தம் யூனியன் அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து வாயில் கருப்பு கொடி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். வட்டாரத் தலைவர் வீரங்கன் தலைமை வகித்தார் மாவட்டபொருளாளர் விஜேந்திரன் வரவேற்றார். மாநில நிர் வாகிகள் சுப்பிரமணி மனோகரன் காத்தவராயன். இலியாஸ். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொது செயலாளர்கள் பாரத் நவீன் சரவணன் யுவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தொடர்ந்து மத்திய அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் நகர வட்டார நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக