ஸ்ரீவைகுண்டம் ஜனவரி 30 நவதிருப்பதிகளில் மூன்றாவது ஆன திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோவிலில் தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் சேர்வை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வெள்ளிக் கிழமை சிறப்பானது. தாயார் ஊஞ்சல் சேர்வை நடந்தது. காலை8 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம்.11 மணிக்கு நித்தியல். மாலை 3 மணிக்கு தாயார் உற்சவர் காய்சினிவேந்தப் பெருமாள் சயன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பூ அலங்காரம் செய்யப்பட்ட ஊஞ்சலில் சேவை சாதித்தார். பின்னர் தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். சௌந்தர்ராஜன். பிச்சு மணி. சேஷகிரி . சுந்தரசீனிவாசன். ஆகியோர் சேவித்தனர். 5 மணிக்கு சாத்து முறை. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன். ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக