திருவண்ணாமலையில் தை மாத பௌர் ணமியை முன்னிட்டு சிறப்பு MEMU ரயில் இயக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

திருவண்ணாமலையில் தை மாத பௌர் ணமியை முன்னிட்டு சிறப்பு MEMU ரயில் இயக்கம் !

திருவண்ணாமலையில் தை மாத பௌர் ணமியை முன்னிட்டு சிறப்பு MEMU ரயில் இயக்கம் !
திருவண்ணாமலை , ஜன‌ 30 -

          திருவண்ணாமலையில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ள தைமாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கப் படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.மாதந்தோறும் வரும் பவுர் ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே வருகிற 1ம் தேதி 8 பெட்டிகள் கொண்ட MEMU சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
விழுப்புரத்தில் இருந்து 1ம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடை யும் அதேபோல் மறுமார்க்கத்தில் திருவ ண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம் பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என  தெற்கு ரயில் வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் 
-கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad