இளைஞர்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு – கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.துரைசாமி பேச்சு.
திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில்,
கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் திடலில்,
திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு,
கபாடி விளையாட்டுப் போட்டிகள் இரவு தொடங்கி அதிகாலை வரை மலைச்சாரலில் நனைந்தபடி சிறப்பாக கபடி போட்டிகள் நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டிகளுக்கு,
தாராபுரம் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.துரைசாமி தலைமை தாங்கினார்.
பின்னர் கபடி வீரர்களிடம் கைகுலுக்கி,
போட்டிகளை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த கபடி போட்டியில்,
டீ.காளிபாளையம்,
இராமபட்டினம்,
கொளத்துப்பாளையம்,
விராச்சுமங்கலம்,
சியாம்பாளையம்,
கரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து,
20-க்கும் மேற்பட்ட கபாடி அணி வீரர்கள் ஆர்வமுடன் களத்தில் இறங்கினர்
போட்டிகள் முழுவதும்,
விறுவிறுப்பாகவும்,
ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடனும் நடைபெற்றது.
இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் போட்டியை கண்டு ரசித்தனர்.
“கபடி கிராமிய விளையாட்டு அல்ல – தமிழர்களின் அடையாளம்
“சமத்துவ பொங்கல் – அனைவருக்கும் சம வாய்ப்பு”
போட்டிக்குப் பின்னர் பேசிய திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.துரைசாமி கூறியதாவது:
“கபடி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.
உடல் வலிமை, மன தைரியம், ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கும் விளையாட்டு.
இன்றைய இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டால்,
தவறான பழக்கங்களிலிருந்து விலகி,
நல்ல பாதையில் முன்னேற முடியும்.
திராவிட பொங்கல் என்பது,
சமத்துவத்தை வலியுறுத்தும் விழா.
ஜாதி, மதம், பணக்காரன் – ஏழை என்ற வேறுபாடு இல்லாமல்,
அனைவரும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அதேபோல்,
இந்த கபடி போட்டிகளும்,
யாருக்கும் முன்னுரிமை இல்லாத,
அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும்
சமத்துவ விளையாட்டு போட்டிகளாக நடத்தப்பட்டுள்ளன.
திமுக அரசு விளையாட்டை ஊக்குவித்து வருகிறது.
கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக,
இத்தகைய போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும்” என தெரிவித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு,
கொளத்துப்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவரும்,
திருப்பூர் கிழக்கு தாராபுரம் ஒன்றிய செயலாளருமான
கே.கே.துரைசாமி,
ரொக்கப் பணமும், நினைவுக் கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார்.
மேம்பாட்டு அணி தினேஷ்,
மாணவரணி குரு,
உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள்,
கபாடி வீரர்கள்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு,
விழாவை சிறப்பித்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக