கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறி இயக்கப்படும் கனரக டாரஸ் லாரிகள் மற்றும் டெம்போகள் மீது மாவட்ட கண்காணிப்பாளர். ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதன் தொடர்ச்சியாக இன்று நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் கனரக டாரஸ் லாரிகளை மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர்.
இந்த வாகன சோதனையில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் நேரக்கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக