தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் !
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதிய மாவட்ட நிருவாகக் குழுக் கூட்டம் காட்பாடி கிளை அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முத்து.சிலுப்பன் கூட்ட த்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த் தனன் கூட்டப் பொருள்கள் முன்மொழி ந்து பேசினார். கூட்டத்தில் 19வது மாவட்ட மாநாடு பரிசீலனை, மாவட்ட மாநாட்டு வரவு செலவு , உறுப்பினர் சேர்க்கை, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தெரிவு, ஆகியன குறித்து விவாதிக்கப் பட்டது. மாவட்ட நிர்வாகிகளுக்கான வேலை பகிர்வு குறித்து அடுத்த கூட்டடத் தில் பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி, மாவட்ட துணைத்தலைவர்கள் வீ.குமரன், சா.குமரன், மாவட்ட இணை செயலாளர் கள் என்.கோட்டீஸ்வர், பி.சுகுமார், வி.செல்வராஜ் வரவேற்பு தலைவர் ஆர்.சுதாகர், செயலாளர் ஆர்.ராதாகிருஷ் ணன், காட்பாடி கிளை பொருளாளர் எம்.ஈஸ்வரி ஆகியோர் பேசினர். கூட்ட முடிவில் வரவு செலவு அறிக்கை மற்றும் இருப்பு பொறுப்புகளை புதிய பொரு ளாளர் மற்றும் செயலாளரிடம் ஒப்படைக் கப்பட்டன. கூட்டடத்தில் மேற்கொள்ளப் பட்ட முடிவுகள்:
1) மாவட்ட மாநாட்டை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திகொடுத்த காட் பாடி அறிவியல் இயக்க கிளை நிர்வாகி கள், வரவேற்புகுழு உறுப்பினர்களுக்கு நன்றி பாராட்டப்பட்டது.
2)மாவட்ட வரவு செலவினங்களை பராமரிப்பதற்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சீலியம் கிளையில் புதியதாக ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு உடன டியாக தொடங்கப்பட வேண்டும் மாவட்ட நிர்வாகக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
3)07-01-2026 வரை வரப்பெற்றுள்ள 1197 ( ஆயுள் சந்தா 135+ ஆண்டு சந்தா. 1062 ) உறுப்பினர் சேர்க்கை மாவட்டக்குழு தீர்மானித்துள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக