பேர்ணாம்பட்டு அருகே உள்ள பூமிரெட்டி பள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

பேர்ணாம்பட்டு அருகே உள்ள பூமிரெட்டி பள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் !

பேர்ணாம்பட்டு அருகே உள்ள பூமிரெட்டி பள்ளி  கிராமத்தில் குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் !
பேரணாம்பட்டு , ஜன 18 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பூமி ரெட்டி பள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது  தற்போதுள்ள அரசு இந்த சாதனை அந்த சாதனை என மேடையில் கூறும் நிலையில் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள், இதனால் சாமானிய மக்களின் நிலை கேள்விக் குறியாகும் அவல நிலை வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகேயுள்ள டிடி .மோட்டூர் ஊராட்சியில் பூமிரெட்டிப் பள்ளி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு கடந்த 35 ஆண்டு களில் வசித்து வரும் மக்களுக்கு குடிப் பதற்கும் மற்றும் பொது பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லை எனவும், டேங்கு அமைத்து தண்ணீரை மோட்டார் மூலம் ஏற்ற வேண்டுமென மக்கள் 1 வருடம் காலமாக  கோருகின்றனர். ஆனால் இதுகுறித்து. பலமுறை ஊராட்சி மன்ற தலைவருக்கு பலமுறை மனு கொடுத் துள்ளனர்.   இதுவரை எந்த பயனும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடை ந்த மக்கள் காலி குடங்களுடன் பேர்ணாம் பட்டு- குடியாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவராத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். 
பொதுமக்கள் கூறுவதாகது:-
தற்போதுள்ள அரசு இந்த சாதனை அந்த சாதனை என மேடையில் கூறும் நிலையில் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள், இதனால் சாமானிய மக்களின் நிலை கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டது பெரும் வருத்த மளிக்கிறது எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் இதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுப்பார் களா அல்லது திமுக அரசுக்கு கைக்கூலி யாக செயல்படுவார்களா என பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad